Freelancer / 2022 பெப்ரவரி 18 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் மேலும் 23 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கடந்த 17 நாட்களில் 400 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
இன்றைய தினம் (18) அவர் விடுத்துள்ள கொரோனா நிலவர அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் (17) புதிதாக 23 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரை 400 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வருடம் 601 தொற்றாளர்களும், மாவட்டத்தில் தற்போது வரை 3,784 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 39 கொரோனா மரணங்களும் நிகழ்ந்துள்ளது.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

13 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago