2025 ஜூலை 16, புதன்கிழமை

மன்னாரில் புதிய வகை நுளம்பு கண்டுபிடிப்பு

Editorial   / 2017 செப்டெம்பர் 06 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

“மன்னார் தீவுப்பகுதியில், அண்மையில் மலேரியா நோயை பரப்பும் ‘அனாஅக் பிலிஸ் ஸ்டீபென்சி’ என்ற நுளம்பின் புதிய வகை காவி அடையாளம் காணப்பட்டுள்ளது, ” என, வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.

மலேரியா நோயை பரப்பும் ‘அனாஅக் பிலிஸ் ஸ்டீபென்சி’ என்ற நுளம்பின்  தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், பத்து  நாட்கள் வேலைத்திட்டம், இன்று (06) ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த வேலைத்திட்டம், தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடல், இன்று (06) காலை 9.30 மணியளவில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“மன்னார் தீவுப்பகுதியில், அண்மையில் மலேரியா நோயை பரப்பும் ‘அனாஅக் பிலிஸ் ஸ்டீபென்சி’ என்ற நுளம்பின் புதிய வகை காவி   பல இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

“இதனால், எதிர் காலத்தில் மலேரியா நோயின் தாக்கம் அதிகரிப்பதற்கான    வாய்ப்புகள் அதிகலவில் காணப்படுகின்றமையால், ஆரம்பத்திலேயே குறித்த நுளம்பு இனத்தின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசர தேவை உள்ளது. இதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .