2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் விசேட சந்திப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இமானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை, இலங்கைக்கான ஜேர்மன் நாட்டு தூதரகத்தின்  துணை தூதுவர்   அன்றீஸ்  பேர்க் (ANDREAS BEAG)  ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று,  இன்று (10) காலை, மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

இதன்போது, ஜேர்மன் நாட்டு தூதரகத்தின்  வர்த்தக, அரசியல், பொருளாதார ஆலோசகர் தர்னி தலுவத்த (DHARINI DALUWATTE) ,  மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்டனி விக்டர் சோசை அடிகளார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த சந்திப்பின் போது, மன்னார் மாவட்டத்தின் தற்போதைய  நிலமை தொடர்பாகவும் குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம்  திகதியன்று, நாட்டில் இடம்பெற்ற  தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் மன்னார் மாவட்டத்தில் சமய, இன ஒற்றுமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

மேலும், மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திகள் தொடர்பில் மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் தூதரக அதிகாரிகள் மன்னார் மறைமாவட்ட ஆயரிடம் கேட்டறிந்து  கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .