Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஏப்ரல் 24 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களைக் கண்டித்தும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், மன்னாரில், இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
இதற்கமைய, மன்னார் பஸார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு பூரண ஹர்த்தால் அணுஷ்டிக்கப்பட்டது.
மேலும், வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் தமது வர்த்தக நிலையங்களுக்கு முன் கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டு, தமது கண்டனத்தையும் வெளிப்படுத்தினர்.
அதே நேரத்தில், மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் முப்படையினரின் பாதுபாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், வழமைபோன்று இன்று போக்குவரத்துகள் இடம்பெற்றாலும், மன்னாரின் இயல்பு நிலை, தொடர்ந்து ஸ்தம்பிதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
11 minute ago
15 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
54 minute ago
1 hours ago