2025 மே 09, வெள்ளிக்கிழமை

’மன்னாருக்கான தடுப்பூசிகள் விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ளன’

Niroshini   / 2021 ஜூலை 13 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

இந்திய மீனவர்களுடன் தொடர்புபடுகின்ற மன்னார் மீனவர்களால் ஏற்படக்கூடிய கொரோனா அச்ச நிலையை நீக்குவதற்காக, மன்னார் மாவட்டத்துக்கு விசேடமாக தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என,  மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில், இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார்.


அங்கு தொடர்ந்துரைத்த அவர். மன்னார் மாவட்டத்துக்கென மேலும் வழங்கப்பட்டுள்ள 22 ஆயிரத்து 230 பைஸர் தடுப்பூசிகள், நாளை (14) முதல் 30 வயதுக்கு மேற்பட்ட மன்னார் மாவட்டத்தை நிரந்தர வதிவிடமாக கொண்டவர்களுக்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

செப்டெம்பர் மாதம் நாட்டை முழுமையாக திறக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் சிந்தனையின் அடிப்படையில், இந்திய மீனவர்களுடன் தொடர்புபடுகின்ற மன்னார் மீனவர்களால் ஏற்படக்கூடிய கொரோனா அச்ச நிலையை நீக்குவதற்காக, மன்னார் மாவட்டத்திற்கு விசேடமாக குறித்த தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன எனவும், அவர் கூறினார்.

குறித்த தடுப்பூசிகள் மன்னார் மாவட்டத்தில்  5 அல்லது 6 நிலையங்களில், ஒவ்வொரு நாளும் வழங்கப்படுமெனவும், அவர் தெரிவித்தார்.

2, 3ஆம் நிலைகளைக் கடந்த கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 1 வயதிலும் குறைந்த குழந்தைகளைக் கொண்டுள்ள தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் வாரத்தில் இடம்பெறுமெனத் தெரிவித்த அவர். இவர்கள் பொது மக்களுக்கான தடுப்பூசி வழங்கும் நிலையங்களுக்கு சென்று தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தேவையில்லை எனவும் இவர்களுக்கு விசேடமாக வேறு நிலையங்களில் எதிர்வரும் வாரம் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X