Niroshini / 2021 ஒக்டோபர் 12 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் உள்ள 90 பாடசாலைகள், எதிர்வரும் 21ஆம் திகதியன்று ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என, மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தெரிவித்தார்.
அத்துடன், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பகுதிகளில் இருந்து மன்னாருக்கு வருகின்ற ஆசிரியர்களுக்காக விசேட பஸ் சேவையொன்றை ஆரம்பிப்பதென முடிவெடுக்கப்பட்டு உள்ளதாகவும், அவர் கூறினார்.
மன்னார் மாவட்டத்தில், எதிர்வரும் 21ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ள பாடசாலைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலொன்று, மன்னார் மாவட்டச் செயலகத்தில், இன்று (12) காலை நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாற தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், மடு கல்வி வலயத்தில் 44 பாடசாலைகள் 2,588 மாணவர்களைக் கொண்டதாகவும், மன்னார் வலயத்தில் 46 பாடசாலைகள் 3,784 மாணவர்களைக் கொண்டதாகவும் காணப்படுகின்றன எனவும் இந்நிலையில் குறித்த பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாக உள்ளன எனவும் சுட்டிக்காட்டினார்.
குறித்த பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்ற போது பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்து, சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெளிவுபடுத்தினார் எனவும், அவர் கூறினார்.
மேலும், 'மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பஸ் போக்குவரத்து தொடர்பாக அரச மற்றும் தனியார் போக்குவரத்து துறையினருடன் கலந்துரையாடி இருந்தோம்.
'அதனடிப்படையில், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பகுதிகளில் இருந்து மன்னாருக்கு வருகின்ற ஆசிரியர்களுக்காக விசேட பஸ் சேவையொன்றை ஆரம்பிப்பதென முடிவெடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
அத்துடன், எதிர்வரும் 21ஆம் திகதியன்று, முன்பள்ளி பாடசாலைகளையும் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம் என, அவர் மேலும் தெரிவித்தார்.
12 minute ago
35 minute ago
40 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
35 minute ago
40 minute ago
50 minute ago