2026 மே 02, சனிக்கிழமை

மன்னார் கடற்பகுதியில் ஆய்வு

Editorial   / 2018 ஒக்டோபர் 31 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் கடற்பிராந்தியத்தில், புதன்கிழமை (02) எண்ணெய் வள ஆய்வு மேற்கொள்ளப்பட இருப்பதால், மன்னார் பகுதி மீனவர்களை, குறிப்பிட்ட தினங்களுக்கு, கடலுக்குச் செல்ல வேண்டாமென, மன்னார் மாவட்டக் கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கமைய, மன்னார் வடக்கு, தெற்கு ஆகிய கடற்பிராந்தியத்தில், புதன்கிழமை (02) காலை 7 மணி முதல் சனிக்கிழமை (03) காலை 8 மணிவரை, கரையிலிருந்து ஐந்து கடல்மைல் தூரத்துக்கு அப்பால், முற்றாக, மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாமென, மாவட்டக் கடற்றொழில் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், மீனவர்களின் மீன்பிடி வலைகள், உபகரணங்கள் என்பன பாதுகாக்கப்படுமெனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், மீனவ கிராமச் சங்கங்கள், மதஸ்தளங்கள் ஊடாக, இது தொடர்பான அறிவுறுத்தல்கள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காலி, களுத்துறை, கொழும்பு, நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம் மற்றும் மன்னார் ஆகிய கரையோர கடற்பரப்புகளில் எண்ணெய் வள ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 26ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த எண்ணெய் வள ஆய்வு நடவடிக்கைகள், எதிர்வரும் 4ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும்.

குறித்த எண்ணெய் வள ஆய்வு நடவடிக்கைகளுக்காக, நான்கு கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, எத்ரிவரும் 4ஆம் திகதி வரை, குறிப்பிடப்பட்ட கரையோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள், மீன்பிடியில் ஈடுபடும் பட்சத்தில், அவர்களின் மீன்பிடி உபகரணங்களுக்குச் சேதம் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதால், பாதுகாப்பது நலன் கருதி, மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட வேண்டாமென, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தால், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .