2026 மே 02, சனிக்கிழமை

மன்னார் கூட்டுறவுச் சங்க கட்டிடம் கையளிப்பு

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் நகர நுழைவாயிலில் சுமார் 28 ஆண்டுகளுக்கு மேலாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான கட்டிடம் இன்று (29) மதியம் கூட்டுறவு திணைக்கள அதிகாரியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான அவசர கலந்துரையாடல் கடந்த சனிக்கிழமை (27) மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது.

இதன்போது, கலந்து கொண்டிருந்த வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே  மன்னார் நகர நுழைவாயிலில் இராணுவத்தின் வசம் காணப்பட்ட பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான கட்டிடத்தை உடனடியாக பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திடம் கையளிக்குமாறு பிரதேச செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

வடமாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த கட்டிடம் இன்று (29) திங்கட்கிழமை மதியம் இராணுவத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டது.

எனினும் குறித்த கட்டிடத்தில் இருந்து இராணுவம் முழுமையாக வெளியேறாத நிலையில் எதிர்வரும் புதன்கிழமை(31) வரை இராணுவம் முழுமையாக வெளியேற கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .