2026 மே 02, சனிக்கிழமை

மன்னார் பிரதான வீதிகளில் கால் நடைகளின் தொல்லை

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் பிரதான வீதிகளில் கால் நடைகளின் நடமாட்டத்தால் தொடர்ச்சியாக விபத்துக்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கால்நடை வளர்ப்பாளர்கள் தமது கால்நடைகளை உரிய முறையில் பராமரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனவும், அது தொடர்பில் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, மன்னார்- யாழ் பிரதான வீதி, மன்னார்-மதவாச்சி பிரதான வீதி மன்னார்- நானாட்டான் பிரதான வீதி ஆகிய முக்கிய பிரதான வீதிகளில் கால் நடைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இதனால் பல்வேறு விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. எனவே உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொலிஸார் இவ்விடயங்களில் தலையிட்டு கால்நடைகளின் மிதமிஞ்சிய நடமாட்டங்களை கட்டுப்படுத்தி மக்களை விபத்துக்களில் இருந்து பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .