Editorial / 2021 செப்டெம்பர் 13 , பி.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீது முஹம்மது முஜாஹிர் என்பவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் சபை அங்கத்தவர் பதவியில் இருந்து நாளை (14) செவ்வாய்க்கிழமை முதல் நீக்கும் வகையில் இன்றையதினம் (13) விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகி உள்ளது.
வடமாகாண ஆளுநர் பியன்சியா சறோஜினிதேவி மன்மதராஜா சார்ள்ஸின் அறிவுறுத்தலுக்கு அமையவே அவர், பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
எவையேனும் தகுதியின்மைகள் உள்ளனவா என்பது பற்றி விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதி அலுவலகர் கந்தையா அரியநாயகத்தின் கீழ் ட தனி நபர் விசாரனைக்குழு அமைக்கப்பட்டது.
வினால் விசாரனை செய்யப்பட்டு வாதித்தரப்பின் சாட்சியங்களைக் கவனத்தில் கொண்டதன் பின்பு தனி நபர் விசாரனைக் குழுவின் அவதானிப்புக்கள் மற்றும் தீர்ப்புக்களுடன் என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
சாகுல் கமீது முஹம்மது முஜாஹிர் அவர்கள் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் என்ற வகையில் அப்பதவியில் பணிகள்,கடமைகளை நிறைவேற்றும் போது 1987 ஆண் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் உப பிரிவு 185 (1)(இ),(அ) ஆகிய பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களை புரிந்தார் என்பதற்கு போதுமான சாட்சியங்கள் உள்ளன என நான் திருப்தியடைகின்றமையால் அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
42 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago