Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2020 ஒக்டோபர் 12 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தமது பிரதேசங்களிலும் கொரோனா தொற்று பரவிக்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மன்னார் பிரதேசச் செயலாளர் எஸ். பிரதீபன், எனவே தொற்றிலிருந்து உங்களையும் ஏனையோர்களையும் பாதுகாப்பதற்கு பின்வரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
“இதற்கமைய, அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வீட்டிலிருந்து வெளியே செல்லவும். அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமானதாகும். கைகளை சவர்க்காரமிட்டு கழுவுவதுடன் தொற்று நீக்கி மூலம் சுத்தப்படுத்தவும். அனைத்து சந்தர்ப்பங்களிலும் இருவருக்கிடையே குறைந்தது 1 மீற்றர் இடைவெளியை பேணவும். தற்போதைய சூழ் நிலையில் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்ப்பது சிறந்ததாகும்” எனத் தெரிவித்தார்.
மேற்குறிப்பிட்ட சுகாதார நடைமுறைகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்த அவர், வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்தோர் குறிப்பாக கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலிருந்து மன்னாருக்கு வருகை தந்தோர் சுகாதார பிரிவினருடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
8 hours ago
9 hours ago