2025 மே 17, சனிக்கிழமை

மன்னார் மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி போராட்டம்

Editorial   / 2020 பெப்ரவரி 23 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் சதோச வளாகத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால், மன்னாரில், நாளை மறுதினம் (25) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

முன்னதாக, அன்றைய தினம் முற்பகல் 9 மணிக்கு, மன்னார் நகர மண்டபத்துக்கு முன் ஒன்று கூடும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், மன்னார் சதோச மனிதப் புதைகுழி இருக்கும் பகுதி வரை பேரணியாகச் சென்று, அங்கு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

சதோச வளாகத்தில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட  மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் அது தொடர்பில் நீதியான விசாரணைகளை நடத்தக் கோரியும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை  நேரடித் தலையீட்டை வலியுறுத்தியுமே, இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .