Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2021 நவம்பர் 09 , பி.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும், நாளைய தினம் (10), விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக, மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி ஏ. ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக, மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்றைய தினம் (09), மன்னார் கல்வி வலயத்தில் 13 பாடசாலைகளுக்கும் மடு கல்வி வலயத்தில் 2 பாடசாலைகளுக்குமாக 15 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மன்னார் மற்றும் மடு வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் கலந்து ஆலோசித்தமைக்கு அமைவாக, நாளைய தினம் (10), மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படுவதாகவும் இதற்கான மறு பாடசாலை தினம் ஒன்றை பின்னர் அறிவிப்பதாகவும், மாவட்டச் செயலாளர் திருமதி ஏ. ஸ்ரான்லி டிமெல் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago