2025 மே 19, திங்கட்கிழமை

மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு தீர்வை பெற்றுத்தருவதாக டக்ளஸ் உறுதி

Editorial   / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக, கடற்றொழில், நீரக வளமூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்தார். 

மேலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள பொருத்தமான நீர் நிலைகளில் இறால் வளர்ப்பு, நண்டுப் பண்ணை போன்றவற்றுக்கான வேலைத் திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்குமாறும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். 

கொழும்பு - மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில், இன்று (11) கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இதன்போது, கடலரிப்பு, துறைமுகங்கள், இறங்குதுறைகளைப் பயன்படுத்துவதில் நிலவி வருகின்ற நடைமுறை ரீதியான சிக்கல்கள் உட்பட பல்வேறு விடயங்கள், மன்னார் மாவட்ட மீனவர் சங்கப் பிரதிநிதிகளால் எடுத்துக்கூறப்பட்டன. 

மீனவர்களின் பிரச்சினைகளைச் செவிமடுத்த அமைச்சர், மன்னார் மாவட்டத்துக்கு விஜயம் செய்து, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரதும் கருத்துகளையும் கேட்டறிந்தப் பின்னர், நியாயமான தீர்வுகளைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X