Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஏப்ரல் 29 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
தற்போதைய சூழ்நிலையில், மன்னார் மாவட்டம் பாதுகப்பாக உள்ளதாகத் தெரிவித்த மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல், மன்னாரில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச் சுற்றுலா பயணங்கள் மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
மேலும், மன்னார் மாவட்ட மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் போது, இந்திய மீனவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் கிடைப்பெற்றுள்ளதாகவும், அவர் கூறினார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில், நேற்று (28) நடைபெற்ற விசேட ஆலோசனைக் கூட்டத்தின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர், இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில், கடல் மார்க்கமாக தலைமன்னார் பகுதிக்கு வந்த 4 நபர்களைக் கடற்படையினர் கைது செய்திருந்தனரெனவும் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட போது, அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டதாகவும் கூறினார்.
இந்நிலையில், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் போது, இந்திய மீனவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளனவெனத் தெரிவித்த அவர், இந்நிலையில், மீனவர்களுக்கு உரிய ஆலோசனைகளையும் விழிர்ப்புணர்வையும் வழங்க ஆலோசித்துள்ளதாகவும் கூறினார்.
தற்போதைய சூழ்நிலையில், மன்னார் மாவட்டம் பாதுகப்பாக உள்ள போதிலும், தாங்கள் கவனமின்றி நடந்து கொண்டால், எதிர்வரும் நாள்களில் பாரதூரமான நிலையை எதிர்கொள்ள வேண்டிவருமெனவும், திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் எச்சரித்தார்.
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago