2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மன்னார் மாவட்டத்தில் கரையோரப் பகுதிகள் தூய்மைப்படுத்தல்

Editorial   / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இராணுவ தளபதியின் பணிப்புரைக்கு அமைவாக இன்று (29) முன்னெடுக்கப்பட்ட  கரையோரப் பிரதேசங்கள் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள்,மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோரப் பிரதேசங்களிலும் முன்னைடுக்கப்பட்டன.

மன்னார் மாவட்ட இராணுவத்தின் 54ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில், 54ஆவது படைப்பிரிவு அதிகாரி பிரிகேடியர் சுபசன வெளிகல தலைமையில் இன்றுக் காலை 6 மணியளவில், குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில், குறித்த தூய்மையாக்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதன்போது, மன்னார் மாவட்டத்தில் உள்ள 220 கிலோ மீற்றர் கடற்கரை பிரதேசங்கள், இராணுவத்தினரால் தூய்மைப்படுத்தப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X