Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார், திருக்கேதீஸ்வரம், மாந்தை மனிதப் புதைகுழிக்கு சற்றுத் தொலைவில் கண்டு பிடிக்கப்பட்ட மர்மக் கிணற்றைத் தோண்டும் பணி, மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (02), இரண்டாவது நாளாகவும் இடம்பெற்ற போது, பல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் நீதவான் முன்னிலையில், நேற்றுக் காலை 8 மணிமுதல் காலை 11 மணிவரை இடம்பெற்ற அகழ்வுப்பணியில், இதுவரை குறித்த கிணறு 1 மீற்றர் ஆழம் வரைஅகழப்பட்டுள்ளது.
நேற்றைய அகழ்வின் போது, தடயப்பொருளாகச் சந்தேகிக்கும் வகையில் பல் ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன், முட்கம்பித் துண்டுகள், கற்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
எனினும், மீட்கப்பட்டுள்ள தடயப்பொருட்கள் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. குறித்த கிணறு, 10 அடுக்குகளாகத் தோண்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நீதவான் முன்னிலையில், மாவட்ட சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரி டபிள்யூ.ஆர்.எஸ்.ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்று வரும் அகழ்வுப்பணியில், அழைக்கப்பட்ட 13 அரச திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மேலும், காணாமல் போன உறவுகள் சார்பாக சட்டத்தரணிகளான வி.எஸ்.நிறஞ்சன் மற்றும் ரனித்தா ஞானராஜா ஆகியோரும் பிரசன்னமாகி இருந்தனர்.
அகழ்வுப் பணிகள், நேற்று மாலை 2 மணி முதல் மீண்டும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
3 hours ago
4 hours ago
6 hours ago