2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

‘மரக் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் இல்லை’

Editorial   / 2020 பெப்ரவரி 06 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள காடுகளில் இருந்து சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட வன திணைக்கள அதிகாரி அதிகாரி து. கௌதமன், இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு, வனவளத் திணைக்களத்தில் உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் கூறினார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில், 13 இலட்சம் பெறுமதியான  மரங்களும் அவற்றைக் கடத்திச் சென்ற 17 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனவெனத் தெரிவித்தார்.

இச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டு நீதிமக்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், அதில் 07 வழக்குகள் நிறைவடைந்துள்ளனவெனவும் கூறினார்.

இந்த வழக்குகளுக்காக இரண்டு இலட்சத்து முப்பதாயிரம்  ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், கௌதமன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .