2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மரக் கன்றுகள் நாட்டும் வைபவம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்.    

“இயற்கையை அரவணைப்போம்” எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில்  மரக் கன்றுகள் நாட்டும் வைபவம் ஒன்று, இன்று (16) நடைபெற்றது.

இதன்போது, அமைச்சர் ராஜித சேனாரத்னவால் மரக் கன்றுகள் நாட்டப்பட்டன.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்திக்கு இடையூறாக இருக்கும்  சில மரங்களை  வெட்ட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதனால், அதற்கு ஏற்றவாறு இயற்கையை அரவணைப்போம் எனும் தொனிப்பொருளில், அமைச்சர் ராஜித சேனாரத்னவால் வைத்தியசாலை வளாகத்தில்  மரக் கன்றுகள் நாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில், முன்னாள் வடக்கு மாகாண  சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவவைகள் பிரதிப் பணிப்பாளர் குமாரவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .