2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மரம் அறுத்த நால்வருக்கு மறியல்

Editorial   / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - நாயாற்று காட்டுப் பகுதியில், சட்டவிரோதமான முறையில் மரம் அறுத்த வனவளத் திணைக்கள உத்தியோகத்தர் உள்ளிட்ட நால்வரை, செப்டெம்பர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம், இன்று (16) உத்தரவிட்டது.

குறித்த நால்வரும், நாயாற்று காட்டுப் பகுதியில் வைத்து, ஞாயிற்றுக்கிழமை (15),  முள்ளியவளை வனவளத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், யாழ்ப்பாணம், முள்ளியளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். 

கைதுசெய்யப்பட்டவர்களை, இன்று (16), முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவர்களை  செப்டெம்பர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X