2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மருத்துவ சேவை வழங்க ஒதியமலை மக்கள் கோரிக்கை

நடராசா கிருஸ்ணகுமார்   / 2019 ஜூலை 01 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு ஒதியமலைக் கிராமத்திற்கு நடமாடும் மருத்துவ சேவையினை நடாத்துமாறு இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2009ஆம் ஆண்டின் பின்னர் நூறு வரையான குடும்பங்கள் இக்கிராமத்தில் குடியேறி உள்ளன. இக்கிராமத்தில் மருத்துவ வசதி இல்லாததன் காரணமாக ஐந்து கிலோமீற்றர் தூரத்தில் நெடுங்கேணி பிரதேச மருத்துவமனைக்கே கிராம மக்கள் செல்ல வேண்டி உள்ளனர்.

மகப்பேற்றிற்குரிய பெண்களுக்கான மாதாந்த சிகிச்சைகள் கூட தண்டுவானில் நடைபெறுவதன் காரணமாக இக்கிராம மக்கள் கடும் போக்குவரத்து நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர்.

இக்கிராமத்திற்கு பஸ் சேவைகள் கூட இடம்பெறுவதில்லை. இதன் காரணமாக முல்லைத்தீவு சுகாதாரத் திணைக்களம் தனது ஆரம்ப சுகாதார செயற்பாடுகளை ஒதியமலைக் கிராமத்தில் மேற்கொள்ள வேண்டும்.

கிராமத்திற்கான நடமாடும் மருத்துவ சேவையினை நடாத்த வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெடுங்கேணி பிரதேச மருத்துவமனைக்கு செல்கின்ற இக்கிராம மக்கள் மேலதிக சிகிச்சை எனில் வவுனியா பொது மருத்துவமனைக்கோ முல்லைத்தீவு பொது மருத்துவமனைக்கோ செல்ல வேண்டிய நிலையில் கிராமத்தில் நடமாடும் மருத்துவ வசதி உருவாக்கப்படுமானால் பெரும் நன்மை கிடைக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .