2025 மே 19, திங்கட்கிழமை

மறவன்புலவு போராட்டக் கைககலப்பு: 3 பெண்கள் உட்பட நால்வர் கைது

Editorial   / 2019 டிசெம்பர் 15 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

 

யாழ்ப்பாணம் - மறவன்புலவு பகுதியில், மின்காற்றாலை அமைக்கும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்ட 3 பெண்கள், பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உட்பட 4 பேர், சாவகச்சேரி பொலிஸாரால், நேற்று (14) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை, விடுதலை செய்யுமாறு, அப்பகுதியைச் சேர்நத சுமார் 50 மேற்பட்ட மக்கள், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால், அப்பகுதியில் சற்று பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

யாழ்ப்பாணம் - மறவன்புலவு பகுதியில், மின்காற்றாலை அமைக்கும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வியாழக்கிழமை (12) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், மின்காற்றாலை அமைக்கும் பணிகளி ஈடுபட்டிருந்தவர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததோடு, பணிகளையும் தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தனர்.

இதையடுத்த. இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், போராட்டத்தில் கலந்துகொண்ட 3 பெண்கள், பிரதேச சபை உறுப்பினர் உட்பட 4 பேரை கைதுசெய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X