2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

‘மற்றவர்களுடைய சுதந்திரத்தை மதிக்க வேண்டும்’

Editorial   / 2020 பெப்ரவரி 04 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இந்த நாளில் மட்டும் சுதந்திரத்தைப் பற்றி கதைக்காமல் எப்போதும் மற்றவர்களுடைய சுதந்திரத்தை மதிக்கின்றவர்களாக இருப்போமாக இருந்தால், இந்த நாட்டில் அமைதியும் சமாதானமும் ஏற்படுமென, மன்னார் மாவட்டச் செயலாளர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில், இன்று (04) நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், சுதந்திரம் என்பது, நலிவடைந்தவர்களுக்கு வழிமையானவர்கள் வழங்குகின்ற ஒரு சந்தர்ப்பமெனத் தெரிவித்தார்.

மற்றவர்களுடைய உரிமைகளை மதிக்கின்ற தன்மையை நாளாந்தம் பின் பற்ற வேண்டுமெனத் தெரிவித்த அவர், மற்றவர்களுக்கு என்ன கொடுக்க வேண்டுமென்று தாங்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டுமென்றும் அவ்வாறான ஒரு நிலை தங்களுக்குள் ஏற்படுகின்ற போதுதான், இந்த நாட்டில் அமைதியும் சமாதானமும் ஏற்படுமெனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .