2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மலசலகூடங்கள் அசுத்தமாக காணப்படுவதாக நோயாளிகள் விசனம்

Princiya Dixci   / 2015 நவம்பர் 02 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மார்க் ஆனந்த்

மன்னார் பொது வைத்தியாசாலையில் பல நோயாளர் பிரிவுகளில் உள்ள மலசலகூடங்கள், அசுத்தமாக காணப்படுவதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக 2ஆம் வாட்டிலுள்ள மலசலகூடம், சேதமடைந்துள்ளதுடன், அதனை நாளாந்தம் துப்பரவு செய்வதில்; தாமதம் ஏற்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு பிரிவுகளிலும் நாளுக்கு நாள் பல நோயளிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறான நிலையில் குறித்த மலசலகூடங்கள் துப்பரவு செய்யப்படுவதில்லை என்றும் வாரத்தில்  ஓரிரு தினங்கள் மட்டுமே துப்பரவு செய்யப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.

குறித்த மலசலகூடங்களை துப்பரவு செய்வதற்கு சிற்றூழியர்கள் சேவையில் உள்ளபோதும் அவர்கள் துப்பரவு விடயத்தில் அசமந்தப்போக்காக செயற்படுவதற்கு என்ன காரணம்? என்று தெரியவில்லையென தெரிவிக்கும் பாதிக்கப்பட்ட நோயாளிகள், இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமைக்கான காரணம் என்ன? என்று கேள்வியெழுப்புகின்றனர்.

மேலும், வைத்தியசாலை நிர்வாகம் இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .