2025 மே 19, திங்கட்கிழமை

‘மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவும்’

Editorial   / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

மன்னார் மாவட்டத்தில், தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக, மன்னார் நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தேங்குகின்ற மழை நீரை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென, சபை உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டது.

மன்னார் நகர சபையின் 20ஆவது அமர்வு, இன்று (21) முற்பகல் 10.30 மணியளவில், நகர சபை தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சன் தலைமையில் நடைபெற்றது.

இதன் போதே, நகர சபை உறுப்பினர்கள், இவ்வாறு வலியுறுத்தினர்.

அதாவது, மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக, மன்னார் நகர சபைக்குட்பட்ட பல பகுதிகளில், மழை நீர் தேங்கியுள்ளதாகத் தெரிவித்த உறுப்பினர்கள், எனவே, குறித்த மழை நீரை வெளியேற்றும் வகையில், வடிகானமைப்புகள் சீர்செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தினர்.

இதேவேளை, வீதி புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X