2025 மே 05, திங்கட்கிழமை

மாங்குளத்தில் ஓட்டோ சாரதிகள் தனிமைப்படுத்தல்

Niroshini   / 2021 மே 26 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

 

முல்லைத்தீவு - மாங்குளம் சந்தியில் உள்ள ஓட்டோ சாரதிகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, அங்குள்ள அனைத்து ஓட்டோ  சாரதிகளையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

மாங்குளம் நகர் பகுதியில், ஓட்டோ சங்கத்தைச் சேர்ந்த சுமார் இருபது வரையானவர்கள் தொழில் செய்து வருகின்றார்கள்.

இந்நிலையில், கடந்த 21ஆம் திகதியன்று, 10 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது, நீதிபுரம் பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது, நேற்று (25) உறுதிபடுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, குறித்த ஓட்டோ சங்கத்தின் சாரதிகள் அனைவரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X