Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 20 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
பனிக்கன்குளம் பகுதியில் வௌ்ளிக்கிழமை வெள்ளை சீருடையில் நின்ற பாடசாலை மாணவனைத் தாக்கிய சாரதியை, மாங்குளம் பொலிஸார் சற்று முன்னர் கைதுசெய்துள்ளனர்.
பனிக்கன்குளம் பகுதியில் பஸ்தரிப்பு நிலையத்துக்குள் சீருடையில் நின்ற பாடசாலை மாணவன் மழுது இ.போ.ச பஸ் சாரதி தாக்குதல் மேற்கொண்டுள்ளார்
இதனைதொடர்ந்து மாணவரின் பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து பொலிஸாரால் குறித்த சாரதியை இன்று பொலிஸ் நிலையம் வருகைதருமாறு அழைக்கப்பட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து பொலிஸ் நிலையம் வந்த சாரதியை, தற்போது மாங்குளம் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணைகளில், மாணவர்கள் பஸ் மீது கல் எரிய முர்ப்பட்டதால் தாக்கியதாக, சாரதி தெரிவித்துள்ளார்
எது எவ்வாறிருப்பினும் ஏ 9 வீதியில் கிழவன்குளம் பனிக்கன்குளம் மாணவர்கள் மாங்குளம் பாடசாலை செல்ல பஸ்கள் தம்மை ஏற்றுவதில்லை எனவும் பாடசாலைக்கு தாமதமாக சென்று தண்டனைகளை அனுபவிப்பதாகவும் தெரிவிப்பதோடு பல நூற்றுக்கணக்கான பஸ்கள் குறித்த வழியாக சென்றாலும் பாடசாலை மாணவர்கள் மக்களை ஏற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றமையும் தமக்கான பாடசாலை சேவையை வழங்குமாறும் பல அபிவிருத்தி குழு கூட்டங்களிலும் கோரிக்கை வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago