Freelancer / 2023 பெப்ரவரி 08 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ. கீதாஞ்சன்
புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பகுதியில், கடந்த வியாழக்கிழமை (02) நண்பரின் பிறந்த தின கொண்டாட்டத்துக்குச் சென்றுவிட்டு, இரவு 10.00 மணியவில், 300 மீற்றருக்குள் இருந்த தமது வீட்டுக்கு 15 வயதுடைய மாணவர்கள் இருவர் சென்றுள்ளனர்.
இதன்போது, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று பொலிஸ் அதிகாரிகள், குறித்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பம் குறித்த விசாரணை, முல்லைத்தீவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் நடைபெற்று வந்தது.
இதையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பொலிஸாருக்கும் நேற்று முன்தினம் முதல் ( 06) மாவட்டத்துக்குள் தண்டனை இடம்மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் நெட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. R
56 minute ago
1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
2 hours ago
5 hours ago