2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

‘மாணவர்கள் இடை விலகுகின்றனர்’

Editorial   / 2017 ஜூன் 18 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வவுனியா - வடக்கு வாருடையார் - இலுப்பைக்குளம் வித்தியாலயம் மூடப்பட்டுள்ளதால், இப்பகுதியில் கூடுதலான பாடாசலை மாணவர்கள் இடைவிலகி வருவதாக, இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.  

தரம் 1 முதல் தரம் 5 வரையான வகுப்புகளை கொண்டு இயங்கி வந்த இப்பாடசாலையில், கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வந்த நிலையில், குறித்த பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்பட்டது.  

தொடர்ந்து ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படாமல் இருந்ததன் காரணமாக, குறித்த பாடசாலை மூடப்பட்டது.  

மிகவும் பின் தங்கிய பகுதியில் மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில், எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத குறித்த கிராமத்தில், பாடசாலையை மூடியதால் மாணவர்கள் கல்வியை விட்டு இடைவிலகி வருவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .