Freelancer / 2023 ஜனவரி 19 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
மது வெறியில் இருந்தவர்களினால் பாடசாலை மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பாக நான்கு பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மூவர் கைது செய்யப்படவில்லை என பெற்றோர்களினால் தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி கண்ணகைபுரம் கிராமத்தில் இருந்து முக்கொம்பன் மகா வித்தியாலயத்திற்கு வருகை தந்த மாணவர்களில் 15 மாணவர்கள் மீது, வழியில் போதையில் நின்ற நான்கு பேரினால் தடிகளினால் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தாக்கியுள்ளனர்.
கண்ணகைபுரம், 150 வீட்டுத் திட்டப் பகுதிகளில் கசிப்பு உற்பத்தி கூடுதலாக காணப்படுவதாகவும் இதனை கட்டுப்படுத்துமாறு பொது மக்களினால் தெரிவிக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது.
கசிப்பினை கட்டுப்படுத்துவதற்கு முக்கொம்பனில் காவல் பிரிவு ஒன்று அமைக்குமாறு பெற்றோர்களினால் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டு இரணைமடுவில் உள்ள கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதி பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நி நிலையில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது. தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலர் பாடசாலைக்கு செல்வதில்லை எனவும் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
7 minute ago
19 minute ago
30 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
19 minute ago
30 minute ago
1 hours ago