2025 மே 22, வியாழக்கிழமை

மாதிரி கிராமம் திறந்து வைப்பு

Editorial   / 2019 ஜூன் 07 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி – தம்பகாமம், வண்ணாங்கேணி வடக்கு  பகுதியில், ஆராதி நகர், சஞ்சீவி நகர்  மாதிரி கிராமம் இன்று அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் செமட்ட செவன வேலைதிட்டத்தின் கீழ் இன்று கிளிநொச்சி தம்பகாமம் வண்ணாங்கேணி வடக்கு  பகுதியில் ஆராதி நகர், சஞ்சீவி நகர் கிராமங்கள்  இன்று அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றது. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் உள்ள தம்பகாமம் வண்ணாங்கேணி வடக்கு  பகுதியில் குறித்த திட்டத்தின் கீழ் மாதிரி கிராமங்கள் இரண்டு  அமைக்கப்பட்டு 32 பயனாளிகளுக்கான காணி உரிமங்கள் கையளிக்கப்பட்டன. குறி்த நிகழ்வில் அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பா.ம உறுப்பினர் சி.சிறிதரன் , கிளிநொச்சி மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் 32 பயனாளிகளுக்கீ காணி உரிமங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட  100 பேருக்கு மூக்கு கண்ணாடிகளும், 50 பேருக்கு தொழில் உபகரணங்களும், 350 பேருக்கு 50 ஆயிரம், ஒரு இலட்சம், இரண்டு இலட்சம் ரூபாய்  பெறுமதியான கடன் திட்டத்தின் கீழான காசோலைகளும் கையளிக்கப்பட்டன.

அத்துடன் 7.5 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டு திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்ட  150 பேருக்கு முதல்கட்ட காசோலைகளும் வழங்கிவைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X