2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மாதிரி வினாத்தாள் புத்தகங்கள் வழங்கி வைப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 22 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில், இவ்வருடம் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு  மன்னார் மாவட்ட அயனிஸ்கா மாணவர் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர்  எஸ்.ஆர்.யதீஸ், நேற்று (21)  கணித பாட மாதிரி வினாத்தாள் புத்தகங்களை இலவசமாக வழங்கி வைத்தார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கல்வியில் ஏற்பட்ட இடைவெளியை கருத்தில் கொண்டே, எஸ்.ஆர்.யதீஸ் குறித்த புத்தகங்களை இலவசமாக வழங்கி வைத்தார்.

இதன்போது, 136 மாணவர்களுக்கு  5 மாதிரி வினாத்தாள் அடங்கிய கணித பாட பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டன.

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின்  அதிபர் அருட்சகோதரர் எஸ்.இ. றெஜினோல்ட்  தலைமையில் கல்லூரியின் பகுதி தலைவர்  ஆசிரியர்  ஆ.சுரேஸ் குமாரின் ஒருங்கிணைப்பில், இந்த கணித புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .