2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘மாற்றீட்டு தொழில்நுட்பத்தால் பாதிப்பு’

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - கண்டாவளைப் பிரசேதத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட  169 குடும்பங்கள் வீட்டுத் திட்டப் பயனாளிகளாக கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னரே தெரிவு செய்யப்பட்டுள்ளபோதும், மாற்றீட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடுகள் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுவதால், குறித்த குடும்பங்கள் வீடுகளை கட்டிமுடிக்கப்படாத நிலையில்  பாதிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில், கடந்த கால யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள்குடியேறிய குடும்பங்களுக்கான வீட்டுத் திட்டங்கள், பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்கள், அரசாங்கம் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு வழங்கப்படும் வீட்டுத்திட்டங்கள் யாவும்   சீமெந்து மணல் என்பவற்றையே பயன்படுத்தி அமைக்கப்பட்டு வருகினறன. இந்நிலையில் கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணகி நகர் குமாரசுவாமிபுரம் நாதன் திட்டம் தருமபுரம் கிழக்கு தருமபுரம் மேற்கு ஆகிய பகுதிகளில் 169 குடும்பங்கள் வீட்டுத்திட்டப்பயனாளிகளாக கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான முதற்கட்ட கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு அத்திவாரம் மாத்திரம் அமைக்கப்பட்;டநிலையில் காணப்படுகின்றன.

அதாவது, அடுத்த கட்டமான கட்டுமானப் பணிகளை கிரவில் மண் சீமெந்து என்பவற்;றை பயன்படுத்தி மாற்றீட்டு தொழில்நுட்பத்தை வீடுகளை அமைக்;குமாறு வற்புறுத்தப்பட்டு வருவதனால் குறித்த வீடுகளை அமைக்க அதன் பயனாளிகள் மறுத்து மணல்சீமெந்து கொண்டு அமைப்பதற்கே தமது   விருப்பத்தை தெரிவித்து வரும் நிலையில் இந்த வீடுகளில் கட்டுமானப்பணிகள் கடந்த நான்கு வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.

வீட்டுத்திட்ட பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டபோதும் இவ்வாறான இழுபறி நிலை காரணமாக வீடுகள் அமைக்கப்படாது காணப்படுவதனால் மேற்படி குடும்பங்கள் விடுகளின்றி சொல்லனத்துன்பங்களை அனுபவித்துவருவதுடன்,  தொடர்ந்து மாற்றீட்டு தொழில்நுட்பத்தில் வீடுகளை அமைக்க மறுத்து வருவதுடன்,

இது தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமும் தமது கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.

இதேவேளை நேற்று (09)  மேற்படி பாதிக்கப்பட்ட பயனாளிகள் வடமாகாண ஆளுனர் அலுவலத்துக்கு சென்று தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இதுவரை காலமும் வழங்கப்பட்டு வருகின்ற வீட்டுத்திட்டங்கள் போன்று தமக்கான வீட்டுத்திட்டங்;களை மாற்றி சீமெந்து மணல் என்பவற்றில் அமைக்க ஏற்பாடு செய்து தரவேண்டும் என்று, கோரிக்கை விடுத்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X