Niroshini / 2020 நவம்பர் 25 , பி.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக, இன்று (25) காலை 10 மணியளவில், நபர் ஒருவர் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்.
தனது காணியின் ஊடாக கழிவு நீர் வாய்க்கால் ஒன்றை அமைக்க கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேளமாலிகிதன் முற்பட்டதாகவும் அதற்கு மாவட்டச் செயலாளர் தெளிவான பதிலை வழங்க வழங்க வேண்டும் எனக் கோரியே, குறித்த நபர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து, கிளிநொச்சி மாவட்ட மேலதிகச் செயலாளர் சிறிமோகன் குறித்த நபருடன் கலந்துரையாடினார்.
இதன்போது, தீர்மானம் எடுக்க கூடியவர் மாவட்டச் செயலாளர் என்பதால், அவர் வருகை தந்ததும், அவருடன் பேசி தீர்வை பெற்றுக்கொள்ளுமாறு, கிளிநொச்சி மாவட்ட மேலதிகச் செயலாளர் கூறியதையடுத்து. போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025