2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு உறுப்பினர்களிடம் விசாரணை

Editorial   / 2023 ஜனவரி 09 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

  சண்முகம் தவசீலன்

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு உறுப்பினர்கள் ஆறு பேரை, முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்த பொலிஸார் அவர்களிடம் நேற்று (09) வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.  

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு உறுப்பினர்களான கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கமலநாதன் விஜிந்தன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான சின்னராசா லோகேஸ்வரன், திருச்செல்வம் இரவீந்திரன், தவராசா அமலன், சமூக செயற்பாட்டாளர்கள் ஞானதாஸ் யூட் பிரசாந், பாஸ்கரன் வனஜன் ஆகியோரிடமே  வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில், பணிக்குழு உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கையில், 2022.11.27 அன்று நடைபெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்காக 26ஆம் திகதி மாங்குளம் - முல்லைத்தீவு வீதியில் துயிலும் இல்ல வாசலில் அமைக்கப்பட்ட  வளைவில், வடக்கு- கிழக்கு இணைந்த இலங்கை வரைபடம், துப்பாக்கி வீரர்கள் சிலரது புகைப்படங்கள் காணப்பட்டன.

2019 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு செய்தபோது, குறித்த வளைவே இருந்தது. ஆகவே, அதே வளைவையே நாம் இம்முறையும் அமைத்தோம். இந்நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் இதை அகற்றுமாறு தெரிவித்தனர். அதை அகற்றுவதற்கு இணக்கம் தெரிவித்து, இரவே அந்த சின்னங்களை தீந்தை பூசி மறைத்திருந்தோம்.  காலை அதை மாற்றம் செய்ய முன்னர், பொலிஸார் அவற்றை எடுத்துச் சென்று விட்டனர்; அதுவே நடந்தது என வாக்குமூலம் வழங்கியதாக தெரிவித்தனர்

குறித்த விடயம் தொடர்பில், முள்ளியவளை பொலிஸார், முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ள நிலையிலேயே, குறித்த நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்வதாகவும் மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .