Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2020 நவம்பர் 25 , பி.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
'மாவீரர்களின் தியாகங்களை மனதிலே குடியிறுப்பதை காட்டு காட்சியை, உங்கள் வீட்டு வாயில்களில் சிவப்பு, மஞ்சல் கொடியேற்றி, வானத்தை நோக்கிய வான வெடி தீப்பிழம்பாக விடக்கூடிய வகையில் ஈக்கில் வானம் போன்ற வெடியை விட்டு, வானம் முழுவதும் சிவப்பு ஒளி வட்டம் தோன்றக் கூடிய வகையில் ஏற்படுத்த வேண்டும்' என்று, தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவருமான வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.
இதனூடாக மாவீரர் துயிலும் இல்லங்களை நினைத்து, அந்தக் கனவு நாயகர்களினுடைய நினைவுகளை நினைவேந்துங்கள் எனவும், அவர் கூறினார்.
மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஊடக சந்திப்பு, மன்னாரில், இன்று (25) நடைபெற்றது. இதன் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், அரசாங்கம் மிக மோசமான காரியத்தைச் செய்தாலும் கூட, தமிழ் மக்களுடைய மனங்களில் இருந்து மாவீரர்களின் தியாகங்களை நீக்கி விடவும் அழித்து விடவும் முடியாதென்றார்.
ஆகவே, இந்த ஆண்டு தடை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறதே தவிர மாவீரர்களை அனுஷ்டிக்க வேண்டும், அந்த அனுஷ்டிப்பதற்குறிய நிலைப்பாட்டில் இருந்து பெரும் எடுப்பிலான, உணர்வுபூர்வமான எண்ணப் பிரதிபலிப்புகள் தமிழர்களுடைய தரப்பிலிருந்து மேல் எழுச்சி பெற்று இருக்கிறதெனவும், அவர் கூறினார்.
இந்த உணர்வு ரீதியான நிலையில் அரசாங்கம் விளையாடக்கூடதெனத் தெரிவித்த அவர், அவ்வாறு விளையாடினால் தமிழ் மக்கள் இவ்வாறாக கிளர்ந்து எழுவார்கள், பொங்கி எழுவார்கள் அவர்களுடைய எண்ணங்கள் எவ்வாறு பிரதிபலிக்கும் என்பதை 27ஆம் திகதி, இந்த அரசாங்கம் புரிந்துகொள்ளும் எனவும் கூறினார்.
'ஆகவே, நீங்கள் அத்தனை பேரும் அஞ்சலியுங்கள். உங்கள் இல்லங்களுக்கு முன்னால் மஞ்சள,; சிவப்புக் கொடி கட்டுங்கள். வானவேடிக்கை விட்டு அந்த தீப்பிழம்பு காட்சி ஊடாக அந்த வீரர்களுடைய உணர்வையும் ஆத்மார்த்த எண்ணங்களையும் நீங்கள் பிரதிபலியுங்கள். இதற்கு அரசாங்கத்தால் தடை விதிக்க முடியாது, கைது செய்யவும் முடியாது' எனவும், அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தமிழர்கள் நீங்கள் இருக்கும் இடத்திலேயே சுகாதார முறைகளைக் கடைப்பிடித்து உணர்வு பூர்வமான நினைவேந்தலை நினைவு கூறுவதற்கு சட்ட ரீதியாக எந்தவித தடையும் இல்லை என, சட்டத்தரணி அன்டனி றொமோல்சன் தெரிவித்தார்.
21 minute ago
30 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
30 minute ago
48 minute ago