Princiya Dixci / 2021 மார்ச் 29 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன்
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊடாக தமக்கு வழங்கப்பட்ட வீடுகளுக்கான மிகுதி கொடுப்பனவுகள் வழங்குமாறு கோரி, முல்லைத்தீவு மாவட்டத்தின் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்டக் காரியாலயத்துக்கு முன்பாக, இன்று (29) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில், ஒட்டுசுட்டான் - திருமுறிகண்டி, இந்துபுரம், வசந்தநகர் உள்ளிட்ட கிராம மக்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட கணக்காளர் என்.பழனிவேல் வருகைதந்து, போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடிதுடன், மூன்று மாதங்களுக்குள் தேவையான நிதியை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.
இருப்பினும், ஒரு மாத காலத்துக்குள் தீர்வு கிடைக்காவிடின் தொடர் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
9 hours ago
9 hours ago
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
14 Nov 2025
14 Nov 2025