Freelancer / 2022 டிசெம்பர் 15 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு விசுவமடுபகுதியில் இரும்பு ஒட்டும் கடையில் மின்சாரம் தாக்கியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளான்.
மூங்கிலாறு வடக்கு உடையார் கட்டுப்பகுதியில் வசித்துவரும் 17 அகவையுடைய இளைஞன், குடும்ப கஷ்டம் காரணமாக விசுவமடு 10 ஆம் கட்டைப்பகுதியில் உள்ள இரும்பு ஒட்டும் கடைஒன்றில் வேலைசெய்துவந்தார்.
தொழில் கருவிக்கு நேற்று (14) காலை மின்இணைப்பினை இணைக்கும் முயற்சியினை மேற்கொண்டபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.
சம்பவத்தினை தொடர்ந்து இளைஞனின் உடலம் இளைஞர்களால் மீட்கப்பட்டு தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை எடுத்து செல்லப்பட்டுள்ளது.
23 minute ago
35 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
35 minute ago
46 minute ago
1 hours ago