Freelancer / 2023 நவம்பர் 04 , பி.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு உடையார் கட்டு குரவில் கிராமத்தில் இன்று 04.11.2023 மின்னல் தாக்கியதில் வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த 3 சகோதரர்கள் காயமடைந்துள்ளார்கள்.
மாலை வேளை இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. இதன்போது வீட்டின் மின்சார இணைப்பு ஊடாக மின்னல் தாக்கியுள்ளது.
பெற்றோர்கள் இல்லாத நிலையில் வீட்டில் இருந்த ஒரு பெண் சகோதரி உள்ளிட்ட இரண்டு ஆண் சகோதரர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
வீட்டில் மின்சார இணைப்புக்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளதுடன் இந்த சம்பவத்தில் காயமடைந்த மூவரும் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
இதன்போது 26 வயதுடைய செபமாலை டென்சன்,19 வயதுடைய செ.மதுசாளினி,16 வயதுடைய செ.அருள்வேந்தன் ஆகியோரே பாதிக்கப்பட்டுள்ளார்கள். R
41 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
43 minute ago
1 hours ago