2025 மே 21, புதன்கிழமை

மீட்கப்பட்ட வெடிபொருள்கள் செயலிழக்கப்பட்டன

Editorial   / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

 

முல்லைத்தீவு – அம்பலவன், பொக்கணைப் பகுதியில் மீட்கப்பட்ட வெடிப்பொருள்களை நேற்று (19) தகர்த்து அழித்துள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

பொக்கணைப் பகுதியில், சனிக்கிழமை (17) வீடொன்றை நிர்மாணிப்பதற்காக, அத்திபாரம் வெட்டும் போது, ஒரு தொகுதி வெடிபொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதையடுத்து, முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதியுடன், அப்பகுதியில் தேடுதல் நடத்திய முல்லைத்தீவு மாவட்ட சிறப்பு அதிரடிப்படையினர், அங்கிருந்து துருப்பிடித்த நிலையிலான டி.56 துப்பாக்கி, ஆகாஸ் கைக்குண்டு, தமிழன் குண்டு ஆகியவற்றை மீட்டனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட வெடிப்பொருள்கள் அனைத்தும், நேற்று (19) தகர்த்து அழிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .