2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மீண்டும் பிரதேச செயலகத்திற்கு வந்த எரிபொருள்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 04 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இருந்து பொலிஸாரினால் எடுத்துச் செல்லப்பட்ட எரிபொருட்கள் மீளவும் பிரதேச செயலகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் க.விமலநாதன் தெரிவித்தார். 

கடந்த 30ந் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தினை சோதனையிட வேண்டும் என பொலிஸார் என்னிடம் அனுமதி கோரியிருந்தனர். 

மக்களுக்கு தெளிவுபடுத்தவும் மற்றும் வெளிப்படைத் தன்மையினை பேணுவதற்காகவும் பிரதேச செயலகத்தினை சோதனையிடுவதற்கு அனுமதி வழங்கி இருந்தேன். 

பிரதேச செயலகத்தினை சோதனையிட்ட பொலிஸார் அவசிய தேவைக்கு இருந்த எரிபொருளினை எடுத்துச் சென்றனர்.  

குறித்த எரிபொருளினை நேற்றைய தினம் மீண்டும்  பிரதேச செயலகத்திடம் பொலிஸார் கையளித்துள்ளனர் எனவும் மாவட்டச் செயலாளர் தெரிவித்தார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .