Freelancer / 2022 பெப்ரவரி 07 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா - கூமாங்குளத்தில் வீடு ஒன்றில் சமைத்துக்கொண்டிருந்த போது, திடீரென எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் முதியவர் ஒருவர் சமைத்துக் கொண்டிருந்த போது திடீரென்று அடுப்பு வெடித்துள்ளது.
இதனையடுத்து சிலிண்டர் பாதுகாப்பாக அகற்றப்பட்டு அனர்த்தம் ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் தடவியல் நிபுணர்களின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
27 Jan 2026
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
27 Jan 2026
27 Jan 2026