Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வடக்கு மாகாண மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பவர்களுக்கே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்போமென, தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் வடமாகாண கடற்றொழிலாளர்கள் இணையமும் இணைந்து, வவுனியா விருந்தினர் விடுதியில், இன்று (19) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவ்வியக்கம் இவ்வாறு தெரிவித்தது.
இது குறித்து அவ்வியக்கம் மேலும் தெரிவித்ததாவது, வடபகுதி மீனவர்கள், போருக்கு முன்னரும் சரி அதற்கு பின்னரும் சரி நிம்மதியான வாழ்வை வாழ்கின்றார்களா என்றால் அதற்கன பதில் கேள்விகுறியே எனவும் சட்டவிரோதமான மீன்பிடி முறை, தென்னிலங்கை மீனவர்களின் வருகை ஆகியன தொடர்பாக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்குப் பலமுறை தாம் தெரியப்படுத்தியும், உரிய தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லையெனவும் தெரிவித்தது.
குறிப்பாக முல்லைத்தீவு - நாயாறு, அளம்பில் ஆகிய பகுதிகளுக்கு சிலாபம், நீர்கொழும்பு, கற்பிட்டி, வென்னப்புவ போன்ற பகுதிகளில் இருந்து வருகை தந்துள்ள மீனவர்கள் நிரந்தரமான வாடிகளை அமைத்து, மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அவ்வியக்கம், தென் இலங்கையைச் சேர்ந்த 32 படகுகளுக்கு தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கியிருந்த போதும், தற்போது 500ஆக அது பெருகியுள்ளதாகவும் கூறியுள்ளது.
அத்துடன், சுண்டிகுளம் தொடக்கம் நாயாறுவரையான ஆற்றுப்பகுதியை பறவைகள் சரணாலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய அவ்வியக்கம், இதனால் தமது தொழில் மேலும் பாதிப்படைந்து உள்ளதாகவும் தெரிவித்தது.
எனவே, தமது கோரிக்கையை நீதியான முறையில் தீர்ப்பவர்களுக்கே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கின் கடற்றொழிலாளர் சமூகம் வாக்களிக்குமெனவும், அவ்வியக்கம் மேலும் தெரிவித்தது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago