2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

’மீனவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு’

Niroshini   / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-விஜயரத்தினம் சரவணன்

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகைக்கெதிரான செவ்வாய்க்கிழமை (15) முன்னெடுக்கப்படவுள்ள தமது மக்களின் போராட்டம் வெற்றிபெறவேண்டுமெனத் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, அந்தவகையிலே இந்தப் போராட்டத்துக்கு தமது பூரண ஆதரவைத் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான மரியநாயகம் தொம்மைப்பிள்ளை, சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று, மாவை சேனாதிராசா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

இதற்தக் கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தரைத்த அவர், இந்தச் சந்திப்பிலே முல்லைத்தீவு மீனவர்கள் எதிர்நோக்கும் பாதிப்பு நிலைமைகள் தொடர்பில் பேசப்பட்டனவெனவும் அதிலும் குறிப்பாக இந்திய மீனவர்களின் அத்துமீறிய தொழிலால் முல்லைத்தீவு மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, செவ்வாய்க்கிழமை (15) இடபெறவுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது எனவும் கூறினார்.

இப்பிரச்சினை முற்றாக நீங்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை என்பது நீண்ட காலமாக நிலவிவருகின்றதெனவும் இது தொடர்பில் பல தடவைகள் தாம் உரியவர்களுடன் விவாதித்திருப்பதாகவும் கூறினார்.

இந்தப் பிரச்சினை தொடர்பில், இந்தியத் தரப்புகளுடன்  தொடர்ந்தும்  விவாதிப்பேமெனவும், மாவை சேனாதிராஜா கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .