Niroshini / 2021 மே 31 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு - சாலை சிறுகடலில் , நேற்று (30) மாலை, இறால் பிடித்து வரும் மீனவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில், 4 பேர் காயமடைந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சாலை சிறுகடலில், இரணைப்பாலை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இறால் கூடு கட்டி, இறால் பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் கட்டிய இறால் கூட்டில் இறால்கள் களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதைத் தொடர்ந்து, இரணைப்பாலை மீனவர்கள் சாலை சிறுகடலுக்குச் சென்று, அங்கு தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட மாத்தளன் பகுதி மீனவர்களை, வாள், கம்பி, கத்தி போன்றவற்றைக் கொண்டு தாக்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து பதிலுக்கு மாத்தளன் பகுதி மீனவர்களும், அவர்களைத் தாக்கியுள்ளனர்.
இதன்போது இரணைப்பாலையைச் சேர்ந்த மூன்று மீனவர்களும், மாத்தளன் பகுதியைச் சேர்ந்த ஒரு மீனவரும் காயமடைந்தனர்.
தாக்குலின் போது இரண்டு மோட்டார் சைக்கிள்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, சந்தேகத்தின் பேரில், இரணைப்பாலையைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகளின் பின்னர், மேலும் நால்வர் கைதுசெய்யப்பட்டனர்.
9 minute ago
28 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
28 minute ago
44 minute ago