2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மீன் ஏற்றுமதியாளர்கள் போல் கஞ்சா எடுத்துச் சென்றவர் கைது

Niroshini   / 2021 ஜூன் 09 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

மீன் ஏற்றுமதியாளர்கள் போல் சூட்சுமமாக மறைத்து நான்கு கிலோகிராம் கஞ்சாவை எடுத்து சென்ற ஒருவர், விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (08) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த மீன் வர்த்தக வாகனத்தில் கஞ்சா பொதி எடுத்து செல்லப்படுவது தொடர்பில் கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, ஸ்தலத்துக்கு விரைந்த அதிiடிப்படையினர், குறித்த வாகனத்தை ஆனையிறவு சோதனைச்சாவடியில் வைத்து, சோதனை செய்தனர்.

இதன்போது சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்லப்பட்ட 4 கிலோ 200 கிராம் எடை கொண்ட கஞ்சா பொதியை மீட்டனர்.

குறித்த சம்பவத்துடன் கடத்தல் தொடர்புடைய வாகன் ஒருவர் கைது செய்யப்பட்டு, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப்படையினரால் ஒப்படைக்கப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .