Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மார்ச் 29 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
லெம்பர்ட்
நாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மன்னார் மாவட்டத்தில் மீன்பிடி மற்றும் அதனுடன் தொடர்புபட்ட கருவாடு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான மண்ணெண்ணை உரிய விதத்தில் தேவையான அளவு கிடைக்காமையினால் மன்னார் மாவட்டத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதே நேரம் நீண்ட வரிசையில் நின்று மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே மண்ணெண்ணை கொள்வனவு செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
மீன்பிடி இன்மையால் மீன்களின் விலை அதிகரித்துள்ளமையினால் கருவாடு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கருவாடுகளின் விலைகளும் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக மக்கள் தற்போது கருவாடுகளை கூட கொள்வனவு செய்ய முடியாத நிலை நிலவி வருகின்றது.
கடந்த மாதம் 900 ரூபா விற்பனை செய்யப்பட்ட நெத்தலி கருவாடு தற்போது 1150 ரூபாயாகவும், கடந்த மாதம் 1100 ரூபா விற்பனை செய்யப்பட்ட கட்டா கருவாடு 1350 ரூபாயாகவும் விலை அதிகரித்து காணப்படுவதோடு,ஏனைய வகை கருவாடுகள் அதிகரித்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago