2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மீன்பிடிக்கச் சென்றவர் துவக்கில் சிக்கி பலி

Editorial   / 2019 பெப்ரவரி 27 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு, வவுனிக்குளம், அலைகரை காட்டுப் பகுதியில், நேற்று (26) மீன்பிடிக்கச் சென்ற ஒருவர், கட்டுத்துவக்கில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர், வவுனிக்குளம் - அம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தந்தையான சுரேஸ்குமார் (வயது 34) என்பவரென அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

தனது வீட்டுக்குப் பின்புறமாகவுள்ள வவுனிக்குளம் பகுதியில், தூண்டிலில் மீன்பிடிப்பதற்காக சென்றபோதே, அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த கட்டுத்துவக்கு வெடித்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .