2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மீன்பிடிக்கச் சென்றவர்கள் மாயம்

Editorial   / 2020 ஜூன் 16 , பி.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட், சண்முகம் தவசீலன்

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன நான்கு மீனவர்களில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

கொரோனா , மீன்பிடி தடை காலம் காரணமாக 83 நாள்களுக்குப் பின்னர், சனிக்கிழமை (13) இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ரெஜின் பாஸ்கர், மலர், ஆனந்த், ஜேசு ஆகிய நான்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இவ்வாறு மீன்பிடிக்கச் சென்றவர்கள், 3 மூன்று நாள்களுக்கும் மேலாக கரை திரும்பாததால், நேற்று (15) காலை, தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (16) காலை இந்தியா - புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள், மீன்பிடித்து விட்டு கரை திரும்பி கொண்டிருந்த போது, நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ஜேசு என்ற மீனவரை மீட்டு, மணல் மேல்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், மீனவர்கள் தேடும் பணியை தீவிரபடுத்துவதுடன், படகு இஞ்சின் கோளாறு காரணமாக இலங்கைக் கடற்பகுதிக்கு சென்றுள்ளனரா என்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் விசாரிக்க வேண்டுமெனக் கோரி, மாயமான மீனவர்களின் உறவினர்கள், அந்நாட்டு மீன்வளத்துறை அலுவலகத்துக்கு முன்னாள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணி, இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான கப்பல், ஹெலிகொப்டர் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .