2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

முகக் கவசமின்றி கடமையாற்றும் சதொச ஊழியர்கள்

Editorial   / 2022 பெப்ரவரி 10 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியா நகர சதொச கிளையில் பாதுகாப்பு ஊழியராக கடமையாற்றும் பெண், முகக் கவசமின்றி கடமையில் ஈடுபட்டுள்ளதால் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த கிளையில் மக்கள் அதிகளவில் வந்து போகும் நிலையில், இன்று (10) காலை அங்கு பொருள் கொள்வனவு செய்ய வந்தவருக்கும் ஊழியர் ஒருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில், பொலிஸார் அங்கு வருகை தந்து குறித்த விடயம் தொடர்பில் விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அங்கு பணிபுரியும் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர், முகக் கவசத்தை தனது உடையில் வைத்துள்ள நிலையில், பொலிஸாருக்கு முன்பாக முகக் கவசமின்றியே காணப்பட்டார்.

இதேவேளை, பொருள்களைக் கொள்வனவு செய்ய வந்தவர்களும் குறித்த சதொச கிளையில் சில ஊழியர்கள் முகக் கவசமின்றியே கடமையில் ஈடுபடுவதாகத் தெரிவித்தனர்.

எனவே, இது தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .